பிரித்தானிய ராஜகுடும்பத்து உறுப்பினர்களிடையே அதிருப்தி இருப்பதாக கூறி இளவரசர் ஹரி அரண்மனை ரகசியத்தை அம்பலப்படுத்தியதாக கூறுகின்றனர்.
குடும்ப உறுப்பினர்களிடையே அதிருப்தி
சமீபத்தில் அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு இளவரசர் ஹரி விரிவான நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த நேர்காணலில் ஹரி பயன்படுத்திய ஒற்றை வார்த்தை, குடும்ப உறுப்பினர்களிடையே அதிருப்தி இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளதாகவும், அதை ஹரி தவிர்த்திருக்கலாம் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
@AP
தொடர்புடைய நேர்காணலில், நீங்கள் மீண்டும் ராஜகுடும்பத்திற்கு திரும்புவீர்களா என்ற கேள்விக்கு, அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும்,
ஒவ்வொரு முறையும் எங்களை பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என அவர்கள் கட்டாயப்படுத்துவதாகவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பகிரங்க மன்னிப்பு கோரும் அளவிற்கு குறிப்பாக நாங்கள் என்ன தவறிழைத்தோம் என்பது மட்டும் அவர்களால் குறிப்பிட முடியவில்லை என்றார்.
மேலும், ஒரு ஆக்கபூர்வமான உரையாடலாக அது இருக்க வேண்டும் எனவும், தனிப்பட்ட முறையில் நடக்கக்கூடிய ஒன்றாகவும், அந்த கருத்து பரிமாற்றங்கள் கசிந்துவிடக் கூடாது எனவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.
@getty
என்ன தவறு செய்தோம்
இதில், ஹரி கூறிய, பிரத்யேகமாக நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதில், பிரத்யேகமாக என்ற வார்த்தையை ஹரி தவிர்த்திருக்கலாம் எனவும், இது குடும்ப உறுப்பினர்களிடையே அதிருப்தி இருப்பதாக ஹரி உணர்வதை அம்பலப்படுத்தியுள்ளதாக ஆய்வு செய்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், ஹரி பயன்படுத்திய அந்த ஒற்றை வார்த்தையை இதற்கு முன்னர் எப்போதும் ஹரி பயன்படுத்தியது இல்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், ஹரி- மேகன் தம்பதி இதுவரை எந்த விடயத்திலும் விரிவான விளக்கம் அளித்ததில்லை எனவும், சில குறிப்புகளை மட்டுமே இதுவரை அவர் அளித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
@getty
வில்லியம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கும், அவரிடம் இருந்து குறுந்தகவல் வந்தால் கட்டாயம் பதிலளிக்க இருப்பதாகவும், ஆனால் இதுவரை அப்படி ஏதும் நடக்கவில்லை எனவும், இருவரும் தங்கள் வேறுபாடுகளை புறந்தள்ளும் காலம் வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.