பாரசீகர்களால் ‘தேவர்களின் உணவு’ என்று அழைக்கப்பட்ட பெருமை, பெருங்காயத்துக்குரியது. அதற்கு காரணம், பெருங்காயத்தின் மிகச்சிறந்த மருத்துவ குணங்கள்.
இந்திய உணவுகளில் பெருங்காயம் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், பெருங்காயத்தின் பூர்வீகம் இந்தியா இல்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகள்தான் பெருங்காயத்தின் பூர்வீகம். நம்முடைய தினசரி உணவில் ஓர் அங்கமாக மாறிவிட்ட இந்த மூலிகைப் பொருள், இந்தியாவில் விளைவிக்கப்படுவதில்லை என்பதே உண்மை. எனவே, நாம் நம் தேவைக்கு ஆப்கானிஸ்தான், கசக்ஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்து வருகிறோம்.
1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு மருந்தானது!
சீன ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, 1918-ல் உலகமெங்கும் பரவிய ஸ்பானிஷ் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கு எதிர்ப்பு மருந்தாக சீனர்கள் பெருங்காயத்தை பயன்படுத்தியுள்ளார்கள் என்பது தெரியவந்தது. மேலும், இன்ஃப்ளூயன்ஸா A (H1N1) வைரஸ் தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்படும் தடுப்பு மருந்துகளின் வளர்ச்சிக்குரிய மூலச் சேர்மங்கள் பெருங்காயத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நாட்டுப்புற பாரம்பரியத்தில் பெருங்காயம்!
நாட்டுப்புற மருத்துவத்தில் பெருங்காயம், குழந்தைகளின் ஜலதோஷத்திற்கு தீர்வளிக்கும் சிறப்பு மூலிகையாக விளங்குகிறது. கார வாசனை வீசும் குழைத்த பெருங்காயத்தில் ஒரு சிறிய பையை நனைத்து, அதை ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் கழுத்துப் பகுதியைச் சுற்றித் தொங்கவிடுவதன் மூலம் ஜலதோஷத்துக்கு சிகிச்சையளித்து வரும் வழக்கம் இருந்து வருகிறது.
மேலும் தாய்லாந்தில், குழந்தைகளின் செரிமான கோளாறுகளைச் சரிசெய்யும் சிகிச்சையாக ‘மஹாஹிங்’ எனப்படும் ஆல்கஹால் டிஞ்சரில் பெருங்காயத்தை கலந்து வயிற்றில் தடவும் வழக்கம் இருந்து வருகிறது.
உண்மையான ருசிக்கும், நறுமணத்துக்கும் அசல் LG பெருங்காயம்!
-
இப்போது 25/- ரூபாயில் 15 கிராம் LG பெருங்காயம் புதிய பாட்டிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
வாங்குவதற்கு முன் பாட்டிலை ஸ்கேன் செய்து, நீங்கள் வாங்குவது அசல் எல்ஜி பெருங்காயம் தானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
(விளக்கமாக அறிய:)
(குறிப்பு: இக்கட்டுரைக் கூறும் செய்திகளை, பெருங்காயம் பற்றிய தகவல்களாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.)