சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக சாடிய இயக்குனர் பா.ரஞ்சித், மக்களை சந்திக்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என குற்றம் சாட்டினார். புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் புழங்கும் குடிநீர் டேங்கில் மர்ம நபர்கள் மலத்தை கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பாக காவல்துறை பல்வேறு குழுக்களை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், சமூக […]