மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15-ல் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார் அமைச்சர் மூர்த்தி

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15-ல்  நடக்கும் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாட்டு பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்து வருகிறார். அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். காளைகளுக்கு மருத்துவ சோதனை நடந்த இடத்தையும் பார்வாயிட்டார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 5,399 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டில் தகுதியான வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஜல்லிகட்டு சிறப்பாக நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.  

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 15-ம் தேதி பொங்கல் அன்று நடைபெறவுள்ளது. போட்டியை நடத்துவது தொடர்பாக அவனியாபுரம் கிராம கமிட்டி, தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதுரை மாநகராட்சியே நடத்தவுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் அமைப்பதற்கான பணியை மதுரை மாநகராட்சி மேயர் இந்து ராணி, மதுரை மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து வாடிவாசலை அமைக்கும் பணியில் அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார், இருளன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 5-வது தலைமுறையாக இந்த பணியில் ஈடுபட்டு வரும் இருவரும், இந்த பணிக்காக பணம் எதுவும் பெறுவதில்லை என்றும் கூறுகின்றனர். இதனிடையே விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், கால்நடை மற்றும் மாடுபிடி வீரர்கள் சோதனை மையம் உள்ளிட்டவற்றை அமைக்க மதுரை மாநகராட்சி சார்பில் 17 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15-ல்  நடக்கும் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்து வருகிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 5,399 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டில் தகுதியான வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். ஜல்லிகட்டு சிறப்பாக நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.