ஷில்லாங்: இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் மூலம் டிஜிட்டல் இந்தியா ஸ்டார்ட் அப் நிறுவன முனையத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டிற்கென இந்தியாவின் முதல் சிறப்பு மையம் ஷில்லாங்கில் வரும் மார்ச் மாதத்திற்குள் அமையவுள்ளது என மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
“வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் அடுத்த தலைமுறை ஆன்லைன் விளையாட்டு சூழ்நிலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஷில்லாங், கொஹிமா மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து அதிக அளவில் வரவேண்டும் என்பது இலக்காகும்” என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்த ஆன்லைன் விளையாட்டு குறித்து பொதுமக்கள் ஆலோசனை கேட்கப்பட்டு தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் 2021-ல் சில திருத்தங்கள் செய்யப்படும் என்றார்.