சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரி பரூக்கிடம் 1,350 கிராம் நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் கமலேஷ், சவுகார் பேட்டை லிலித், அமித்தை, பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு படை கைது செய்தனர். ஏமாற்றி வாங்கிய 1,350 கிராமில் தற்போது 600 கிராம் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது.