சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், […]