ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. வசூல் ரீதியாக உலகளவில் இடம்பிடித்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், மேக்கிங்கிற்காகவும் பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருதையும் வென்று அசத்தியது. சிறந்த அசல் பாடலுக்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ரிஹானா, லேடி காகா மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோரின் பாடல்களை கடந்து வெற்றி பெற்றது.
— rajamouli ss (@ssrajamouli) January 14, 2023
இந்த பாடலுக்கான விருதை இசையமைப்பாளர் கீராவாணி பெற்றுக் கொண்டார். விருது அறிவிக்கப்படும்போது ராஜமௌலி, கீராவாணி மற்றும் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஆர்ஆர்ஆர் படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ராஜமௌலி, கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் உலக பிரசித்தி பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்துக்கு கேப்சனாக ‘கடவுளை சந்துவிட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார். ராஜமௌலியுடன் ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீராவாணியும் உள்ளார். அவரும் இந்த தருணத்தை தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், ” திரைப்படங்களின் கடவுளைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்து. அவரிடம் டூயல் உள்ளிட்ட அவரது திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறினேன். நாட்டு நாடு பாடல் பிடிக்கும் என்று அவர் கூறியதை என்னால் நம்பவே முடியவில்லை” என தெரிவித்துள்ளார். இருவரின் பதிவும் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
And I couldn’t believe i pic.twitter.com/BhZux7rlUK
— mmkeeravaani (@mmkeeravaani) January 14, 2023