இன்று ராணுவ தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்கரூருவில் ராணுவ தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ராணுவ தின அணிவகுப்பு மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகள் முதல்முறையாக டெல்லிக்கு வெளியே நடத்தப்படுவதாகவும், இது ராணுவம் மக்களுடன் இணைவதற்கு பொன்னான வாய்ப்பு என்றும் தெரிவித்தார்.
இது நமது உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புவதாகவும் மனோஜ் பாண்டே தெரிவித்தார்.
ஆங்கிலேயரிடம் இருந்த ராணுவ தலைமைப் பொறுப்பை 1949-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இந்தியாவின் கரியப்பா ஏற்றார்.
இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாக ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.