தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அறிய வாய்ப்பு!

‘தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி பயனடையுங்கள்’ என்று, விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம், செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிவிப்பில், “உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி பயிர் செய்து அதிக மகசூல் பெற்று விவசாயிகள் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 

இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு, முள்புதர்கள் அகற்றப்பட்டு, உழவு செய்து பயிர் சாகுபடிக்கேற்ற நிலமாக மாற்றப்படும். 

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் சாகுபடிக்கு உகந்த தங்கள் தரிசு மற்றும் இதர தரிசு நிலங்களை, தாமாகவே முன்வந்து ‘உழவன் செயலி’ மூலம் பதிவு செய்யலாம் அல்லது விருப்பமுள்ள விவசாயிகள் தகுந்த ஆவணங்களான ஆதார், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்கு நகல் போன்றவற்றுடன் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். 

மானிய விலையில் பருவத்திற்கு ஏற்றாற்போல் விவசாயிகள், உளுந்து அல்லது எண்ணெய்வித்து பயிர்கள் என விருப்பத்திற்கு ஏற்ப பயிரிடலாம். அதற்கான விதை, உயிர் உரம், நுண்ணூட்டக்கலவை, உயிரியல் உரங்கள் போன்ற இடுபொருட்கள் மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்களிலிருந்து வழங்கப்படும். 

ஒரு ஹெக்டேர் உளுந்து, எள் பயிர்களுக்கு ரூ.13,500 மானியமாகவும், மணிலாவுக்கு ரூ.22,900 மானியமாகவும் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயி அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பயன் பெறலாம். அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெறலாம். 

எனவே செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் தங்கள் தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி பயனடையுங்கள்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.