பிரித்தானியாவின் பிராட்போர்டில் உள்ள வீடு ஒன்றை முகமூடி அணிந்த இரண்டு குண்டர்கள் துப்பாக்கி மற்றும் ஸ்லெட்ஜ்ஹாம்மருடன் பயங்கரமான தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமூடி அணிந்த மர்ம நபர்கள்
பிரித்தானியாவின் பிராட்போர்டில்(Bradford), கிறிஸ்டோபர்ஸ் கோர்ட்டில் உள்ள வீடு ஒன்றை குறி வைத்து கடந்த ஜனவரி 11ம் திகதி அதிகாலை இரண்டு முகமூடி அணிந்த நபர்கள் தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவரிடம் துப்பாக்கியும், மற்றொரு நபரிடம் ஸ்லெட்ஜ் ஹாம்மரும் இருந்தது, இது தொடர்பாக வெளியான கதவு மணிக் காட்சிகளில், மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர் ஸ்லெட்ஜ் ஹாம்மரை எடுத்துக்கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு நடந்து செல்கிறார்.
Footage obtained by Scarcity shows the moment a man fires a shotgun at a house after being disturbed during a burglary in Bradford on the 11.1.23
Bradford burglars shoot at home with woman and children insidehttps://t.co/LlIkUMBVYB
website also https://t.co/9V8GTYulIL pic.twitter.com/M1RGXSwja4
— Scarcity News (@ScarcityStudios) January 13, 2023
Ben Lack-YappApp
பின்னர் அவர் ஆயுதத்தால் கதவை ஆக்ரோஷமாக தாக்குகிறார், அவருக்கு பின்னால் வந்த இரண்டாவது நபர் கையில் துப்பாக்கியை வைத்து இருப்பதையும் அதில் தோட்டாக்களை ஏற்றுவது போலும் தெரிகிறது.
இதற்கிடையில் பெண் ஒருவர் கூக்குரலிடும் சத்தம் கேட்கிறது, பின் ஆயுதமேந்திய குண்டர்கள் ஒன்று சேர்கிறார்கள், அவர்கள் சொல்வதில் பெரும்பாலானவை செவிக்கு புலப்படுவதில்லை.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு யார்க்ஷயர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், அத்துடன் கொலை முயற்சியில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்.
பிராட்போர்டைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Ben Lack-YappApp
இந்நிலையில் மேற்கு யார்க்ஷயர் காவல் துறையின் துப்பறியும் தலைமை இன்ஸ்பெக்டர் மாட் ஹோல்ட்ஸ்வொர்த் வழங்கிய தகவலில், “எந்தவொரு துப்பாக்கி வெளியேற்றமும் உள்ளூர் சமூகத்தில் சிறிது கவலையை ஏற்படுத்தும், மேலும் அனைத்து துப்பாக்கிச் சம்பவங்களையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம், நாங்கள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான எதையும் கண்டால் அல்லது எங்களின் தற்போதைய விசாரணையில் எங்களுக்கு உதவக்கூடிய வேறு ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.