காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற புஷ்ப கமல் பிரசண்டா, 68, தன் முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக, நம் நாட்டிற்கு விரைவில் வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், நேபாள காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து நேபாளத்தில் ஆட்சி அமைத்துள்ளன.
இக்கூட்டணி சார்பில் நேபாள நாட்டின் பிரதமராக புஷ்ப கமல் பிரசண்டா, கடந்த டிச., 26ல் மூன்றாவது முறையாக பதவியேற்றார்.
இந்நிலையில் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான அரசின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு 10ம் தேதி நடந்தது. இதில் பிரசண்டா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
இதையடுத்து பிரதமர் பிரசண்டா செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ”இந்தியாவிற்கு விரைவில் அரசு முறைப் பயணமாக செல்ல உள்ளேன். எனினும், அதற்கான பயண திட்டமிடல்கள் இறுதியாகவில்லை. இருநாட்டு துாதரக அதிகாரிகளும் ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளனர்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement