பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது. முதல்நாளான இன்று பிரதமர் மோடி, டெல்லியில் திறந்த வாகனத்தில் பேரணி செல்கிறார்.
இதையொட்டி டெல்லி நகர சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜக முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட 350 பாஜக பிரமுகர்கள் இன்றைய பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி இரண்டு நாள் நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்கிறார். அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து பாஜக தேசிய குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.