Nepal Plane Crash: பேஸ்புக் லைவ்வில் பயணி… விபத்தின் பயங்கர வீடியோ – 68 பேர் உயிரிழப்பு

Nepal Plane Crash: நேபாளம் தலைநகர் காத்மண்டூவில் இருந்து, பொகாரா நகருக்கு புறப்பட்ட விமானம் நேற்று (ஜன. 15) தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

உள்ளூர் விமானமான இதில் 68 பயணிகள், 4 விமான பணியாளர்கள் பயணித்தனர். மேலும், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், தென்கொரியாவை சேர்ந்த 2 பேர், ஆஸ்திரேலியா, அர்ஜென்டீனா, பிரான்ஸ், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 15 வெளிநாட்டின் அந்த நேபாள விமானத்தில் பயணித்துள்ளனர். 

காட்மாண்டூவில் இருந்து நேற்று காலை 10.33 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டதாக கூறப்படும் நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரு நகரங்களுக்கும் இடையே 25 நிமிடம் பயண நேரம் என்றும் பொகாரா விமான நிலையம் அருகே தான் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | Nepal Plane Crash: நோபாள விமான விபத்து – 72 பேர் நிலை என்ன?

எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏடிஆர் 72 இரட்டை எஞ்சின் டர்போபிராப் விமானம்தான் விபத்துக்குள்ளானது. மேலும், விபத்து தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தை சுற்றி வருகின்றன. அதில், அந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சற்று இடது புறமாக திரும்பி, அப்படியே தலைகீழாக கவிழ்ந்துவிழுவது பதிவாகியிருந்தது. மேலும், விமானத்தின் உள்ளே இருந்த ஒருவர் விபத்துக்கு சில நிமிடங்கள் முன் பேஸ்புக் நேரலையில் வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. 

விபத்தில் நடுவானில் இருந்து அப்படியே கோர்கே ஆற்றங்கரையோரம் கீழே விழுந்த விமானம் உடனடியாக தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயை அணைக்க அதிகாரிகள் போராடி நிலையில், மீட்புப் பணி தாமதமாகியுள்ளது. 

இந்த விமானத்தில் பயணித்த 72 பேரில் 68 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் இருந்த 72 பேரும் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தவிட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன. தொடர்ந்து, நேபாள அரசு 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளனர். நேபாளின் தரமற்ற விமான சேவைக்கு இந்த விபத்து ஓர் உதராணம் என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

விமானத்தில் இருந்த ஐந்து இந்திய பயணிகளும் உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவரான சோனு ஜெய்ஸ்வால் தான், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சற்று முன்பு பேஸ்புக் லைவ்வில் இருந்துள்ளார். அவரும் உயிரிழந்துவிட்டார். அந்த வீடியோ அவரது பேஸ்புக் பக்கத்தில் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.  பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்தனர். 

மேலும் படிக்க | பெண்ணுரிமைக்கு முன்னுரிமை இல்லை: தாலிபான் திட்டவட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.