பொங்கல் பண்டிகை முன்னிட்டு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்திற்கு சென்று இருந்தார்.
தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினரான பழனிச்சாமி என்பவர் உயிரிழந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து பொங்கல் விழா கொண்டாட்டத்தை நிறுத்திய எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்த செய்தியாளர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றார்.
எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் இருசக்கர வாகனத்தை ஓட்ட எடப்பாடி பழனிச்சாமி பின்னால் அமர்ந்து கொண்டு சென்றார். இதனை அங்கிருந்து தொண்டர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சாமான்யர்களின் தலைவர் ,
ஏழைகளின் வலி – உழைப்பு அனைத்தும் அறிந்தவர்….
எளிமையே உருவான எங்கள் அண்ணன் , கழக பொதுச்செயலாளர் @EPSTamilNadu அவரின் கிராம பொங்கல் விழாவினிடையே…. #பொங்கல்_வாழ்த்துக்கள் pic.twitter.com/uUzUYAHvXa— Raj Satyen (@satyenaiadmk) January 15, 2023