பிரதமர் மோடிக்கு பிடித்த உணவு வகைகள்… பாஜக செயற்குழு கூட்டத்துக்காக தயாரான மெனு!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அதற்கான வேலைகளை ஏற்கெனவே பா.ஜ.க தொடங்கிவிட்டது. அதற்கான முன்னேற்பாடாக பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கர்நாடக சட்டசபை தேர்தல் உட்பட வரும் தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு விருப்பமான பல உணவுகளும், இந்திய இனிப்பு வகைகளும் மெனுவில் இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். கூட்டத்தில் கலந்து கொள்ளும் பா.ஜ.க உறுப்பினர்களுக்கு ஜனவரி 16 அன்று இரவு உணவாக, Salty chapati – carrom seeds, ஆலு-மேத் (aloo-methi), ரவா மசால் தோசை – சாம்பார், தால் – நெய் கிச்சடி, (sev-tomato curry), மிஷ்ரி-மாவா (mishri-mawa), பாதாம் அல்வா, மைசூர்பாக் ஆகியவை வழங்கப்படும்.

வட மாநில உணவு வகைகள்

இரண்டாம் நாள் உணவில், தினை உணவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மோருடன், சூப் – பஜ்ரா மஹேரி (bajra maheri with soup), ரெட் கௌபி சாலட் (red cowpea salad), ஃபைபர் தஹி படா (fiber dahi bada), தினை பப்டி சாட் (millet papdi chaat), ராகி இட்லி, சட்னி, சாம்பார் – பஜ்ரா கிச்சடி( bajra khichdi), கதி-தினை (millet – kadhi), பிசிபேல் பாத் (bisibele bhaat), ஜோவர் தோக்லி (jowar dhokli), தால் பஞ்சமேலி (panchmeli with dal), பஜ்ரா ரொட்டி (Bajra roti), பஜ்ரா மேத்தி பராத்தா (bajra methi paratha), ஜோவர் ரொட்டி ( jowar roti),பார்லி (barley), மற்றும் சனா பராத்தா (chana paratha) ஆகியவையும் பரிமாறப்படும்.

இதனுடன், பாரம்பரிய முறையில் பஜ்ரா கீர் (bajra kheer) மற்றும் ஷமாக் கி பிர்னி (shamak ki phirni) இனிப்புகள் வழங்கப்படவிருப்பதாகவும், இவை எல்லாம் பிரதமர் மோடி விரும்பி உண்ணும் உணவுகள் எனக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.