
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: வேளாண் அலுவலர் (விரிவாக்கம்)
காலியிடங்கள்: 33+4
சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,38,500
பணி: வேளாண்மை உதவி இயக்குநர்
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.56,100 – 2,06,700
பணி: தோட்டக்கலை அலுவலர்
காலியிடங்கள்: 41+7
சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,38,500
தகுதி: வேளாண்மை பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2023 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: நிரந்தர பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். கட்டணச் சலுகையை அறிவிப்பில் தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு, வாய்மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in / ww.tnpsc.gov.in ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்: 20-5-2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-2-2023
மேலும் விவரங்கள் அறிய: https://www.tnpsc.gov.in/Document/tamil/01_2023_Agri%20and%20Horti_Tamil.pdf இங்கே கிளிக் செய்யவும்.