2024 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி? பாஜகவின் மெகா மாஸ்டர் பிளான் இதுதானாம்!

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் அரசியல் கட்சிகள் தற்போதி்ல் இருந்தே ஆயத்தமாகி வுருகின்றன. தேசிய அளவில் காங்கிரஸுடன் கைகோர்ப்பதா அல்லது மூன்றாவது அணி அமைப்பதா என பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். மூன்றாவது அணி அமைப்பது வேஸ்ட்… பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உடன்தான் கரம் கோர்க்க வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கருதுகின்றன.

தமி்ழ்நாட்டை பொறுத்தவரை பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 25 தொகுதிகளாவது வெற்றிப் பெற வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இப்போதே இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறார்.. பல்வேறு அரசிய்ல் கட்சிகளும், தலைவர்களும் எம்.பி., தேர்தலுக்கு ஆயத்தமாகி வர, மத்திய பாஜக அரசு 2024 தேர்தலை எதிர்கொள்ள வேற லெவலில் தயாராகி வருகின்றதாம்.

தாங்கிரஸு்க்கு தற்போது மக்களவையில் வெறும் 50 க்கும் குறைவான எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். வரும் தேர்தலில் இந்த இடங்கள் கூட காங்கிரஸுக்கு கிடைக்காத அளவுக்கு மகத்தான ஹாட்ரிக் வெற்றியை பெற லேண்டுமென பாஜக கருதுகிறதாம். அப்போதுதான் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற தனது அரசியல் லட்சியம் முழுமையாக நிறைவேறும் என்றும் பாஜக எண்ணுகிறதாம்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா எனும் தமது விருப்பம் ஈடேற, மக்களவை பொதுத் தேர்தலின்போது மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொள்ளும் தீவிர பிரசாரம் மட்டும் போதுமானதாக இருக்குமா என்ற ஐயம் தாமரை கட்சியின் மேலிடத்துக்கு எழுந்துள்ளதாம். காரணம் என்னதான் மோடி இமேஜ் இருந்தாலும், இரண்டு முறை தொடர்ந்து ஆட்சிபுரிந்து வருவதால் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்காளர்கள் மத்தியில் இருக்கதான் செய்யும் என்ற யதார்த்தத்தை பாஜக மேலிட தலைவர்கள் உணர்ந்துதான் உள்ளனராம்.

இதன் விளைவாக, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது தாமரை கட்சி தன்வசம் வைத்துள்ள 300-க்கும் அதிகமான எம்.பி. தொகுதிகளில் கணிசமான இடங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் இழக்க வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக தலைவர்கள் கருதுகின்றனர்.

ஆனால், தற்போது தாமரை கொடி பறக்கும் தொகுதிகளில் ஒன்றை கூட காங்கிரசிடம் விட்டுவிடக் கூடாது என்பதிலும், காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற தமது அரசியல் இலக்கை அடைவதற்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் இரண்டு தரமான சம்பவங்களை செய்ய பாஜக திட்டமி்ட்டுள்ளதாம்.

இதுகுறித்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் வட்டாரங்கள் கூறும்போது, “2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை பெற. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், அதாவது 2024 ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயிலை திறப்பது என்பது முதலாவது தரமான சம்பவம். இது தேர்தலை கருத்தில் கொண்டு, தேர்தலுக்கு சரியாக சில மாதங்களுக்கு முன் கோயில் திறக்கப்படுவதாக கருதக்கூடாது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து கோயில் பயன்பாட்டுக்கு வர அவ்வளவு அவகாசம் தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை.

அடுத்து, ஜம்மு -காஷ்மீரை மையமாக வைத்து பல ஆண்டுகளாக பெரும் தலைவலியாக இருந்துவரும் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை்க்கு தீர்வு காணும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்பது. இதற்கான ராணுவ நடவடிக்கையை இந்த ஆண்டு இறுதியிலோ, 2024 தொடக்கத்திலோ மத்திய பாஜக அரசு மேற்கொண்டு தரமான சம்பவத்தை நிகழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுத்துவிட்டால், அது தேர்தலில் வடமாநில வாக்காளர்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என்று கட்சி மேலிடம் வலுவாக நம்புகிறது” என்று அந்த வட்டாரங்கள் கெத்தாக கூறுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.