தரைதட்டிய கங்கா விலாஸ் சொகுசு கப்பல்… பயணிகளின் நிலை என்ன?

கங்கா விலாஸ் எனும் உலகின் மிக நீண்ட கப்பல ப.யணத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் வரை, கங்கை நதியில் கொகுசு கப்பலின் பயணம் தொடங்கி உள்ளது.

இந்த பயணம் தொடங்கப்பட்டு மூன்று நாட்களாகவே ஆகி உள்ள நிலையில், கங்கா விலாஸ் சொகுசு கப்பல் இன்று தரை தட்டியது பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது கப்பல் தரை தட்டி நின்றதாகவும், கங்கையின் நதியின் ஆழமற்ற பகுதியில் பயணித்ததன் காரணமாக கப்பல் தரை தட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு குழுவினர், கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகளை சிறிய படகுகளி்ல் பத்திரமாக மீட்டு அவர்களை சாப்ராவுக்கு அருகே பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளன.

தரை தட்டிய கப்பலி்ல் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால் அது சரிசெய்யப்பட்டு, விரைவில் மீண்டும் தனது பயணத்தை தொடங்கும் எனவும், வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகரை கப்பல் அடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பலில் மொத்தம் இருக்கும் 18 அறைகளில் 36 பயணிகள் தங்கிக் கொள்ள இயலும். இதுதவிர கப்பல் ஊழியர்கள் 40 பேர் உடன் பயணிக்கின்றனர். இவர்களுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 62 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் அழகு நிலையம், சலூன், உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

கங்கா விலாசில் பயணிக்க ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை பயணக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த பயணத்திற்கும் ஒரு நபருக்கு 20 லட்ச ரூபாய் வரை செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் வகையில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அவை கங்கை நதியில் கலக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.