புகையிரத சேவைக்கு புதிதாக 3,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இந்த நாட்களில் நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது அரச வேவையில் உள்ள அரசு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணிக்குழு ஊழியர்கள் மத்தியில் இருந்து 3,000 பேர் புகையிரத சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
‘சம்பளம் வழங்க வழி இல்லாததனால்இ நீண்ட காலமாக புகையிரத திணைக்களத்திற்கு ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அதனால், தற்போது அரச வேவையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணிக்குழு ஊழியர்கள் மத்தியில் இருந்து 3000 பேரை புகையிரத சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். புகையிரத சாரதிகள் 9 பேர் மட்டுமே ஓய்வு பெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.