நிறமிழப்பு நோயின் பிடியில் மம்தா மோகன்தாஸ்

சிவப்பதிகாரம் படத்தில் விஷால் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். அதன்பிறகு குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். இடையில் திருமண விவாகரத்து, புற்றுநோய் பாதிப்பு என இரண்டு மிகப்பெரிய இக்கட்டான சோதனைகளை சந்தித்தாலும், அதிலிருந்து மீண்டு, தற்போதும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார் மம்தா மோகன்தாஸ்.

இந்த நிலையில் சோசியல் மீடியா பக்கத்தில் தனது இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் மம்தா மோகன்தாஸ். அந்த புகைப்படங்களில் அவரது முகத்தோற்றமே மாறி போய் காட்சியளிக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‛‛ஆட்டோ இம்யூன் எனப்படுகிற தன்னுணர்வு நோய் தாக்குதலுக்கு தான் ஆளாகி இருப்பதாகவும் இதன் காரணமாக தனது நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து ரசிகர்களும் அவரது நலம் விரும்பிகளும் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகை சமந்தா மையோசிடிஸ் எனும் தசைநார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதாக கூறி சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மம்தா மோகன்தாஸும் அதுபோன்று ஒரு வித்தியாசமான நோயினால் தாக்கப்பட்டுள்ள செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.