ஐதராபாத்: செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது 8வது வந்தே பாரத் விரைவு ரயில் சேவையாகும். இந்த ரயில் தெலங்கானா மற்றும் ஆந்திராவை சுமார் 700 கிலோமீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரயில் சேவை இது. இந்த வந்தே பாரத் விரைவு ரயில் ஆந்திராவில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.