ஐதராபாத்தின் 8வது நிஜாம் துருக்கியில் காலமானார்

திருமலை: ஐதராபாத்ததை ஆட்சி புரிந்து வந்த 8வது நிஜாம் துருக்கியில் காலமானார். அரசு மரியாதையுடன் ஐதராபாத்தில் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஐதராபாத்தை ஆட்சி புரிந்து வந்த 8வது நிஜாம் மீர் முகரம் ஜா(86), துருக்கியில் உள்ள  இஸ்தான்புல்லில் கடந்த சனிக்கிழமை  வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டு அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

ஏற்கனவே 7 நிஜாம்களின் கல்லறைகள் சார்மினார் அருகே உள்ள அரச கல்லறையில் உள்ளதால் முகரம் ஜா உடலும் அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. 1967ல் முகரம் ஜா தனது தாத்தாவின் மறைவால் ஐதராபாத்தின் 8வது நிஜாம் ஆனார். டேராடூனில் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ராயல் மிலிட்டரி அகாடமியில் படித்தார். முகரம் ஜா ஐந்து பேரை மணந்தார். முகரம் ஜா 1980 வரை இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார். 1990ல் மனைவியை விவாகரத்து செய்து சிறிது பணத்தை இழந்தார். தற்போது இவரது சொத்து மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.