அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.