அரச குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் மேகன்! தந்தையை அவமானப்படுத்தியது போல… வெளிவரும் தகவல்


இளவரசர் ஹரியின் குடும்பத்தை பழிவாங்க மேகன் மெர்க்கல் நினைக்கிறார் என அரச குடும்ப எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தார் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மேகன் விரும்புவதாக அரச குடும்ப எழுத்தாளர் டாம் போவர் கூறியுள்ளார்.

மேகனின் தனிச்சிறப்பு

அவர் மேலும் கூறுகையில், மனிதர்களின் பலவீனத்தை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல நடப்பது மேகனின் தனிச்சிறப்பாக எனக்கு தோன்றுகிறது.
அப்படி தான் தனது தந்தையை அவமானப்படுத்தி குடும்பத்தினரையும் பல நண்பர்களையும் தூக்கி எறிந்தார்.

அதே போல ஹரியின் குடும்பத்தாரைப் பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கிறார்.
இளவரசர் ஹரியும் கடந்த வாரத்தில் தனது குடும்பத்தார் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியதை இங்கு நினைவுப்படுத்த வேண்டும்.

அரச குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் மேகன்! தந்தையை அவமானப்படுத்தியது போல... வெளிவரும் தகவல் | Meghan Wants Revenge On Prince Harry S Family

Gettyimages/CHRIS JACKSON / CLARENCE HOUSE

பலவீனத்தை…

மேகனால் ஒருவரின் பலவீனத்தை ஒரு மைல் தொலைவில் உணர முடியும், அதை தான் அவர் செயல்படுத்த நினைப்பதாக தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.