சென்னை: அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர் தியாகராஜன் உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடியின் சகோதர் தியாகராஜன். இவர் சிறுநீரக சிறப்பு மருத்துவர். இவருக்கு திடீர் உடல்நலப் பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் இன்று அதிகாலை […]