மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
ஞாயிறுக்கிழமை முதல் அங்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்து 219 நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதில் உயிர்சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளிவராத நிலையில், நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் நிலை குலைந்தன.
ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான ஒரு நிலநடுக்கத்தால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு அலறியடித்தபடி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.