இத்தாலியில் 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாபியா தலைவன் கைது
ரோம்: இத்தாலியில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாபியா கும்பல் தலைவன் மேட்டியோ மெசினா டெனாரோ கைது செய்யப்பட்டார். இவர் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.
1993 முதல் தலைமறைவான இவருக்கு தற்போது வயது 60. மெசினா டெனாரோ, சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாபியாவின் தலைவனாக இருந்துள்ளார்.
ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது போலீசார் மடக்கினர். தற்போது அவருக்கு புற்று நோய் இருப்பதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்த இவரை நள்ளிரவில் போலீசார் ரகசியமாக சுற்றி வளைத்தனர். இவரது கைது மிக சுலபமாக இருந்தது என்றும், எவ்வித வன்செய்ல்களும் நடக்கவில்லை, ஒரு கைவிலங்கு கூட தேவையில்லாமல் போனது என போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement