ஐந்தறிவு ஜீவனுக்கு வாழ்வளிப்பது நல்ல செய்தி தான் அதே சமயம், அது மத்தவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கையாளவேண்டும். சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் உணவு டெலிவரி செய்யும் ரிஸ்வான் என்ற ஒரு இளைஞர் நாய்க்கு பயந்து மாடியிலிருந்து கீழே குதித்து பலியான சம்பவம் அடங்குவதற்குள்ளாக.
ஹரியானா மாநிலம் கர்னாலில் ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது. முனாக் என்ற கிரமத்தில் மெஹர் சிங் என்பவரின் 12 வயது மகன் ஒசாந்த் என்பவரை, பூல்சிங் என்பவரது வளர்ப்பு நாய் கடித்து விட்டதாக கூறி அங்கிருந்த காவல் துறையில் பூல்சிங் என்பவருக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அவர் அளித்த புகாரில் பூல்சிங் வளர்த்து வந்த நாய், அப்பகுதியில் பல பேருக்கு இடையூராக இருந்து வந்ததுடன், எனது மகனை ஞாயிற்றுக்கிழமை கடித்துவிட்டது. உடனடியாக ஒசாந்தை நாயிடமிருந்து காப்பாற்றி உரிய சிகிச்சை அளித்து வருகிறோம் ஆகவே இதற்கு காரணமாக இருந்த நாய் உரிமையாளர் பூல்சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இதற்கு எதிர் வழக்காக நாய் உரிமையாளர் பூல்சிங் “எங்கள் நாய் கடித்ததற்காக மெஹர்சிங் அதை கொன்றுவிட்டார். ஆகவே எங்கள் நாயை கொன்ற வழக்கில் மெஹர்சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று, பதில் வழக்கு ஒன்றை பூல்சிங் பதிந்துள்ளார்.இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM