நேபாள விமான விபத்து: பைலட் தம்பதி… 2006 விமான விபத்தில் பலியான விமானியின் மனைவியும் பலியான சோகம்!

கடந்த 2006-ஆம் ஆண்டு நேபாளின் எட்டி ஏர்லைன்ஸின் ட்வின் ஒட்டர் என்னும் சரக்கு விமானம், தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அதில் நேபாளைச் சேர்ந்த விமானி தீபக் போக்ரல் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்த விமானி தீபக் போக்ரலின் மனைவி அஞ்சு கதியவாடா கடந்த 2010-ம் ஆண்டு , அவரது கணவரின் இன்சூரன்ஸ் பணத்தில் எட்டி ஏர்லைன்சிஸ் இணைந்து பயிற்சி பெற்று விமானி ஆனார்.

விமான விபத்து

இந்நிலையில் 44 வயதான அஞ்சு கதியவாடா கடந்த ஞாயிற்றுக்கிழமை (15-1-23) காத்மாண்டுவிலிருந்து 72 பயணிகளுடன் புறப்பட்ட எட்டி ஏர்லைன்சின் விமானத்தில் விமானத்தை இயக்கும் துணை விமானியாக பயணித்துள்ளார். விமானம் போகாரா என்னும் நகரத்தை கடக்கும்போது , விபத்துக்குள்ளாகி 68 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் அஞ்சு கதியவாடாவும் உயிரிழந்துள்ளார். 72 பேரில் யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்று அறிக்கைகள் தெரிவித்திருக்கின்றன.

இந்த கோர சம்பவம் குறித்து எட்டி ஏர்லைன்சின் செய்தித் தொடர்பாளர் பர்டௌளா கூறுகையில், “அஞ்சு கதியவாடா நேபாள் தலைநகரமான காத்மாண்டுவிலிருந்து நேபாளின் இரண்டாவது பெரும் நகரமான போகாரா வரை விமானத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். தற்போது விபத்து நடந்த விமானத்தில், 21,900 மணிநேரங்கள் வரை விமானத்தை இயக்கிய கேப்டன் கமலுக்கு, 6,400 மணிநேரங்கள் விமானத்தை இயக்கிய அஞ்சு கதியவாடா துணை விமானியாக இருந்தார்.

விமானி அஞ்சு கதியவாடா

விபத்து நடந்த பகுதியில் கமலின் உடல் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. அஞ்சு கதியவாடாவின் உடல் பகுதிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை”, என்றும் அவர் கூறியுள்ளார்.

2006-ம் ஆண்டு விமானம் தரை இறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் கணவர் தீபக் போரால் உயிரிழந்தத நிலையில், தற்போது அவரின் மனைவி அஞ்சு கதியவாடாவும் விமான விபத்தில் மரணித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.