ஜெயிலரில் வாய்ப்பு எனக்கூறி மாடல் அழகியிடம் ரூ.8.5 லட்சம் மோசடி!!

மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சன்னா சூரி, 2007ஆம் ஆண்டு மிஸ் மகாராஷ்டிரா பட்டம் வென்றவர். இவருக்கு, நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ரூ.8.5 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

இதனையடுத்து சன்னா சூரி, மும்பை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு பியூஸ் ஜெயின் என்பவர் இன்ஸ்டாகிரம் மூலம் அறிமுகமாகி, ஜெயிலர் படத்தில் புது முகங்கள் தேவை போலீஸ் உடையில் வீடியோ எடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி சன்னா சூரியும் வீடியோ மற்றும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இதனையடுத்து பியூஸ் ஜெயின் புகைப்படத்தை ஜெயிலர் பட போஸ்டர் போல் வடிவமைத்து, பியூஸ் ஜெயின் திருப்பி அனுப்பியுள்ளார்.

மேலும் அறிமுக இயக்குநர் என ஒருவரை அறிமுகப்படுத்தி அவருக்கு 2 படங்களில் வாய்ப்பு அளிப்பதாகவும் கூறியுள்ளார். படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்லவிருப்பதால், விசா கட்டணம் செலுத்த ரூ.8.48 லட்சம் வேண்டுமென பியூஸ் ஜெயின் கேட்டுள்ளார்.

பின்னர் சில நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புக்கு தாமதம் ஏற்படுகிறது என கூறியுள்ளார். பியூஸ் ஜெயின் பகிர்ந்த படத்தை சன்னா சூரி இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்திருப்பதைப் பார்த்த ஜெயிலர் படக்குழு அவரின் தயாருக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.

அப்போது படக்குழுவினர் நாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை எனக் கூறியுள்ளனர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சன்னா சூரி அதன்பிறகு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.