வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐக்கிய நாடுகள்: பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மக்கியை, சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., அறிவித்துள்ளது. இவர், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதின் உறவினர் ஆவார்.
லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக இருந்த ரஹ்மான் மக்கியை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்திருந்தது. அப்துல் மக்கி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது, இளைஞர்களை மூளைச் சலவை செய்ததுடன், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் காரணமாக திகழ்ந்தார்.
இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், இந்த முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வந்தது. இதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இச்சூழ்நிலையில், சீனா தனது தடையை விலக்கி கொண்ட நிலையில், அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement