ராஜ குடும்பத்தினரின் தவறான உறவுகள்: தேவையில்லாமல் பலியாக்கப்பட்ட டயானா


ராஜ குடும்பத்தின் காதல் கதைகளைக் கேட்டால் தலைசுற்றுகிறது…

காதலித்தது ஒருவரை, திருமணம் செய்தது வேறொருவரை, திருமணத்துக்குப் பின் மீண்டும் காதல், துரோகம், மரணம் என, பிரம்மாண்ட திரைக்கதையுடன் அமைக்கப்பட்ட திரைப்படம் போல இருக்கிறது ராஜ குடும்பத்தின் காதல் கதைகளைக் கேட்பதற்கு…

இதுவரை வெளிவராத ஒரு புதுக்கதை

இளவரசர் சார்லஸ் திருமணத்துக்கு முன் கமீலாவைக் காதலித்த விடயமும், திருமணத்துக்குப் பின்னும் அவருடன் முறைதவறிய உறவு வைத்திருந்ததும் உலகுக்குத் தெரிந்த கதை.

தற்போது அதிகம் வெளிவராத ஒரு கதை தற்போது வெளிவந்திருக்கிறது.

Harper

அது… இளவரசர் சார்லசின் தங்கையும், கமீலாவின் கணவரும் காதலித்த கதை!

இளவரசர் சார்லசின் தங்கையான இளவரசி ஆனும், கமீலாவின் கணவரான ஆண்ட்ரூ பார்க்கர் பௌல்ஸும் ஒரு காலத்தில் காதலித்திருக்கிறார்கள். இது நடந்தது 1970இல். கமீலா இளவரசர் சார்லசை சந்திப்பதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பே, இராணுவ மேஜரான ஆண்ட்ரூவும், ஆனும் சந்தித்திருக்கிறார்கள்.

ஆனால், ஆண்ட்ரூ வேறொரு திருச்சபையைச் சார்ந்தவர். ராஜ குடும்பத்தில் வேறொரு திருச்சபையைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்ய அனுமதி கிடையாது. ஆக, காதல் துளிர்விடும் நேரத்திலேயே, முளையிலேயே கருகிவிட்டிருக்கிறது.

உலகுக்குத் தெரிந்த விடயம், இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பது. தெரியாத விடயம், ஆண்ட்ரூ கமீலாவையும், ஆன், கேப்டன் மார்க் பிலிப்ஸ் என்பவரையும் திருமணம் செய்தபிறகும் இருவரும் உறவைத் தொடர்ந்தார்களாம்.

TODAY Who is Queen Camilla

இதற்கிடையில், கமீலா இளவரசர் சார்லசை சந்தித்திருக்கிறார். கமீலாவைக் கண்டதும் சார்லசுக்கு காதல் வந்திருக்கிறது. ஆனால், அது தன் உடல் மீதான பாலியல் கவர்ச்சி என்றே நினைத்திருக்கிறார் கமீலா. ஆக, சார்லஸ் தன் மீது ஆசை வைத்திருப்பது தெரிந்தும் ஆண்ட்ரூவைத் திருமணம் செய்திருக்கிறார் கமீலா.

சார்லஸ் டயானா என்னும் அப்பாவியை கடமைக்குத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். ஆனாலும் கமீலா மீதான ஆசை அவரை விடவில்லை. அதைத்தான் டயானா, எங்கள் திருமண வாழ்க்கையில் மூன்று பேர் இருக்கிறோம் என வெளிப்படையாக பிபிசி தொலைக்காட்சியில் போட்டு உடைக்க, சார்லசுக்கும் கமீலாவுக்கும் இடையில் தவறான உறவு இருப்பதை உலகமே அறிந்துகொண்டிருக்கிறது.

கமீலாவும் ஆண்ட்ரூவும் 1995ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்திருக்கிறார்கள். 1992 முதலே சார்லசும் டயானாவும் வெளிப்படையாக விவாகரத்து செய்யாவிட்டாலும், மன ரீதியாக பிரிந்து வாழ்ந்துவந்திருக்கிறார்கள்.

கமீலாவுக்கு விவாகரத்து ஆனதும், அவருக்கும் சார்லசுக்கும் இடையில் மீண்டும் உறவு தீவிரமாகியிருக்கிறது. 1996இல்தான் சார்லசும் டயானாவும் முறைப்படி விவாகரத்து செய்திருக்கிறார்கள்.

Us Weekly Prince Charles, Camilla Parker Bowles: Relationship Timeline

கமீலா தன்னை விவாகரத்து செய்ததும், ஆண்ட்ரூ, 1996ஆம் ஆண்டு ரோஸ்மேரி என்ற பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் 14 ஆண்டுகள் இனைந்து வாழ்ந்த நிலையில், 2010ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்திருகிறார் ரோஸ்மேரி.

2005ல் சார்லசும் கமீலாவும் முறைப்படி திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

சார்லஸ் தன் மனைவி டயானாவை மனரீதியாக பிரிந்த அதே 1992ஆம் ஆண்டு ஆன், தன் கணவர் மார்க்கை விவாகரத்து செய்திருக்கிறார். அதே ஆண்டில் வைஸ் அட்மிரல் சர் திமோத்தி லாரன்ஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் ஆன்.

வரலாறு திரும்பினால் எப்படி இருந்திருக்கும்!

இளவரசி ஆனைக் காதலித்த ஆண்ட்ரூ, கமீலாவைத் திருமணம் செய்ய, ஆண்ட்ரூவின் மனைவியாக இருந்த கமீலாவை இளவரசர் சார்லஸ் திருமணம் செய்ய, தேவையில்லாமல் ஒரு டயானாவும், ஒரு ஆண்ட்ரூவின் திருமண வாழ்வும் பலியாகவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.

ராஜ குடும்பத்தினரின் தவறான உறவுகள்: தேவையில்லாமல் பலியாக்கப்பட்ட டயானா | Royal Family Princess Annes Forgotten

Image: Max Mumby/Indigo/Getty Images

பேசாமல் ஆனும் ஆண்ட்ரூவும் திருமணம் செய்துகொண்டிருந்தால், ராஜ குடும்பத்தில் இன்றுவரை நீடிக்கும் அவப்பெயர்கள் இல்லாமல் இருந்திருக்கும். பிள்ளைகள் ஹரியும் வில்லியமும் இப்படி அவமானங்களை எல்லாம் சந்திக்காமல் கௌரவமாக வாழ்ந்திருக்கக்கூடும். ஏன் டயானா கூட உயிருடன் இருந்திருக்கலாம். வரலாறு திரும்பவா போகிறது?

விடயம் என்னெவென்றால், இளவரசி ஆனும், ஆண்ட்ரூவும் இப்போதும் நண்பர்களாக நீடிக்கிறார்கள்!
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.