'சொர்க்கத்தில் இணைந்த நண்பர்கள்' உயிரிழந்த செல்ல நாய்… சுஷாந்த் சிங் தங்கை உருக்கமான பதிவு

Sushant Singh Rajput Dog Death: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020ஆம் ஆண்டு தற்கொலையால் உயிரிழந்தால் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டது. அதுதொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

இருப்பினும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு மக்களை பெரும் துயருக்கு ஆளாக்கியது. திரையில் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென சிறப்பான இடத்தை வைத்திருந்த அவரின் திடீர் மறைவை பலராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வசதியும், பிரபலமும் மட்டும் இந்த வாழ்வின் நிறைவை தந்திராது என சுஷாந்த் சிங்கின் மரணம் உணர்த்தியதாக பலரும் இன்றுவரை நினைவுக்கூர்வார்கள். அந்த அளவிற்கு அவர் மறைவின் தாக்கம் இருந்தது. 

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தங்கை பிரியங்கா சிங் ஒரு துயரமான செய்தியை ட்விட்டரில் பகிரிந்துள்ளார்.  அதில், சுஷாந்த் சிங்கும், அவரும் அவர்களது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை இணைத்துள்ளார். 

அதில்,”நீண்ட தூரம் போய்விட்டாய்… நீ உனது நண்பனுடன் சொர்க்கத்தில் இணைந்துவிட்டாய். நானும் அடுத்து வருகிறேன். அதுவரை மிகுந்த கவலையுடன்…” என குறிப்பிட்டு அவர்களது வளர்ப்பு நாய் மறைவு செய்தியை உருக்கமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுஷாந்த் சிங்கும், அவரின் நாயும் விளையாடும் வீடியோக்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதன்மூலம், சுஷாந்த் சிங் அவரது நாயுடன் எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தார் என்பதை உணர்ந்துகொள்ள முடிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.