திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பட்டாசு வெடித்து மாடி வீடு இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிரிழந்தனர்.
வீரக்கல்லைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் பட்டாசு கடை வைத்திருந்தார். நேற்று மாலையில் குழந்தைகள் வெளியே விளையாட சென்ற நிலையில் ஜெயராமன் மற்றும் மனைவி நாகராணி ஆகியோர் மட்டும் மாடியில் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது திடீரென பட்டாசுகள் பயங்கரமாக வெடித்ததில் மாடி வீடு முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகி போனது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று 6 மணி நேரம் போராடி கட்டிட இடிபாடுகளை அகற்றி கணவன், மனைவி ஆகியோரின் சடலங்களை மீட்டனர். பட்டாசு விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.