கர்நாடகாவில் கார் ஓட்டுனரை சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பைக்கில் சென்ற நபர் இழுத்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் பைக் ஓட்டி செல்லும் ஒருவர் தனது வாகனத்தின் பின்புறம் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பைக் ஓட்டுனர், முதியவரின் கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்து கீழே இறங்கிய ஓட்டுனர், பைக்கை ஓட்டி வந்தவரிடம் நிற்கும்படி கூறியுள்ளார்.
ஆனால், அந்த நபர் நிற்காமல் தப்பி சென்றுள்ளார். அவரை பிடிக்கும் நோக்கில், முயன்று, முடிவில் அவரது பைக்கின் பின் பகுதியை கார் ஓட்டுனர் பிடித்துள்ளார். இதனால், வழியெங்கும் அவரை இழுத்து கொண்டே பைக்கில் சென்றவர் பயணித்துள்ளார்.
மற்றொரு பைக்கில் வந்த நபர் மற்றும் ஆட்டோவில் வந்தவர் உதவியுடன் அந்த பைக் நிறுத்தப்பட்டது. பைக்கில் இழுத்து செல்லப்பட்ட நபரின் ஆடைகள் கிழிந்து இருந்தன. அவர் மெதுவாக எழுந்து வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலானது.
விசாரணையில் கார் ஓட்டுநர் முத்தப்பா என தெரிய வந்துள்ளது. அவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். பைக் ஓட்டி சென்றவரை பிடித்து சென்று போலீசார் விசாரை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பைக் ஓட்டிச் சென்ற நபரை கைது செய்துள்ளதாக பெங்களூரு போலீஸார் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளை நிச்சயமாக பொறுத்துக் கொள்ள முடியாது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
newstm.in