பொங்கல் பண்டிகை முடிந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு, கொண்டாட்டங்களுக்கு பிறகு இன்று பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுகின்றன.
இந்நிலையில் காரைக்காலில் இன்று (18.01.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நான்கு நாட்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்கு முன்பும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவிகள் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர்.
கல்லூரிகள் பொங்கல் விழா நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் மீண்டும் தொடங்குகின்றன. இந்நிலையில் காரைக்காலில் இன்று (18.01.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கார்னிவல் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இறுதி நாள் விழா நடைபெறுவதை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு (18.01.23) விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.
newstm.in