மழலையர் பாடசாலைக்கு அருகில் நடந்த கொடூர நிகழ்வு! மனமுடைந்து பதிவிட்ட மேக்ரான்


உக்ரைனில் நடந்த ஹெலிகொப்டர் விபத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கீவில் நடந்த விபத்து

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்திற்குள்ளானது. இதில் உள்விவகார அமைச்சர் Denys Monastyrsky உட்பட 16 பேர் பலியாகினர்.

குறித்த ஹெலிகொப்டர் ப்ரோவெரி என்ற பகுதிக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததால், அங்கிருந்த மழலையர் பாடசாலை அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

மழலையர் பாடசாலைக்கு அருகில் நடந்த கொடூர நிகழ்வு! மனமுடைந்து பதிவிட்ட மேக்ரான் | Macron Condolence For Kyiv Helicopter Crash

@Sergei Supinsky/Agence France-Presse/Getty Images 

மேக்ரானின் இரங்கல்

இந்த நிலையில் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதிவிட்டுள்ளார்.

அவரது இரங்கல் பதிவில்,

‘உக்ரைன் உள்துறை அமைச்சர் Denys Monastyrsky-யின் துயர மரணம் வருத்தமளிக்கிறது.

ஒரு மழலையர் பாடசாலைக்கு அருகில் நடந்த இந்த கொடூரமான நிகழ்வில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கும் எனது எண்ணங்கள் இருக்கும்.

பிரான்ஸ் தனது உக்ரேனிய நண்பர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.   

இமானுவல் மேக்ரான்/Emmanuel Macron

@Julien de Rosa/EPA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.