பாஜகவைச் சேர்ந்த இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது பாலியல் புகார்..!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜகவைச் சேர்ந்த எம்பியுமான பிரிஜ்பூசன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனை பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

சம்மேளனத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அதில், ஏராளமான சிறுமிகளுக்கு சம்மேளனத் தலைவர் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், பெண்கள் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கும் சம்மேளனத்தின் ஆசி பெற்ற பயிற்சியாளர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் பிரபல வீராங்கனை வினேஷ் போகட் குற்றஞ்சாட்டினார்

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.