வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தாவோஸ் : உலக பொருளாதார மன்றக் கூட்டத்திற்கான அழைப்பை நிராகரித்துவிட்டதாக, ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு அழைப்பே அனுப்பப்படவில்லை என, மன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில், உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், உலகளவில் பல்வேறு பொருளாதார நிபுணர்கள், நிறுவன தலைவர்கள், அரசு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், எலான் மஸ்க் கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும், தாவோஸ் அழைப்பை நிராகரிப்பதற்கான காரணம், அது சலிப்பை ஏற்படுத்துவதால் தான் என்றும் தெரிவித்திருந்தார். அவர் அழைக்கப்பட்டதாகக் கூறினாலும், உலக பொருளாதார மன்றத்தின் செய்தி தொடர்பாளர் யான் ஸோப் இது குறித்து கூறும்போது, எலான் மஸ்குக்கு கடைசியாக அழைப்பு விடுத்தது கடந்த ஆண்டோ அல்லது சமீப ஆண்டுகளிலோ அல்ல. ‘கடைசியாக 2015ல் தான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் எந்த ஆண்டு கூட்டத்திற்கும் பதிவு செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement