கேரளா: ஹோட்டலில் சாப்பிட்ட 68 பேருக்கு உடல்நலக்குறைவு| Kerala: 68 people who ate in the hotel fell ill

எர்ணாகுளம்: கேரளாவில் ஹோட்டலில் சாப்பிட்ட 68 பேருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஜிலிஸ் என்ற ஹோட்டல் ஒன்றில் கடந்த திங்கள் கிழமையன்று வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டனர். இதில் குழந்தைகள் , முதல் பெரியவர் என 68 பேருக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டதில் கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் அதன் உரிமத்தையும் சஸ்பெண்ட் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.