சுதந்திர காஷ்மீர் கேள்வி மே.வங்க அரசுக்கு உத்தரவு| Order to the Government of Bengal on the question of independent Kashmir

புதுடில்லி, மேற்கு வங்கத்தில், 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாளில், சுதந்திர காஷ்மீர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில அரசுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி தேர்வு சமீபத்தில் நடந்தது.

இதில், ஒரு பாடத்தில் சுதந்திர காஷ்மீரை வரைபடத்தில் அடையாளப்படுத்தும்படி கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வித் தாளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, இந்த விவகாரம் சர்ச்சையானது.

”தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு வெளியிட்ட வினாத்தாளில் இந்த கேள்வி இடம் பெற்று இருந்தது. தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மேற்கு வங்க இடைநிலை கல்வி வாரிய தலைவர் ராமானுஜ் கங்குலி தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, மேற்கு வங்க அரசுக்கு மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.