உக்ரைன் போர் துவங்கியதுமே, இணையத்தில் ஒரு குறிப்பிட்ட விடயம் அதிகமாக, வேகமாக தேடப்பட்டது.
அது, உக்ரைன் பெண்களை நிர்வாணமாக பார்க்க ஆசைப்பட்டவர்களின் தேடல்!
இணையத்தில் வைரலான தேடல்
உக்ரைன் பெண்களின் நிர்வாண மற்றும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் கிடைக்கின்றனவா என்ற தேடல் 600 சதவிகிதம் அதிகரிக்க, உக்ரைன் அகதிகளின் ஆபாசப்படங்கள் என்ற விடயம் ட்ரெண்டிங் ஆனது.
பேஸ்புக் முதலான சமூக ஊடகங்களில் உக்ரைன் பெண்களைக் குறிவைத்து, உங்களுக்கு எளிதில் பணம் வேண்டுமா? எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் கம்பெனி கொடுத்தால் போதும், அதாவது பாலுறவுக்கு தயாராக இருந்தால் பணம் கிடைக்கும், என்னும் ரீதியில் விளம்பரங்கள் வரத்துவங்கின.
ஜேர்மனியின் நிலை என்ன?
உலகில் எந்தெந்த நாடுகளில் பாலியல் தொழில் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இந்த உக்ரைன் பெண்களுக்கு ஆபத்தும் அதிகம். ஆம், அவர்களைக் கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளி பணம் பார்க்க அந்த நாடுகளில் வாய்ப்புகள் அதிகம்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, பாலியல் தொழிலுக்கு அங்கு சுதந்திரம் அதிகம். பாலியல் தொழிலுக்காக பெண்களைக் கடத்துபவர்களில் குறைவானவர்களே தண்டிக்கப்படுகிறார்கள்.
இந்த விவரங்களை வெளியிட்டுள்ள OSCE எனும் அமைப்பு, உக்ரைனிலிருந்து தப்பிவந்துள்ளவர்கள் தங்களைக் குறித்த விவரங்களை உக்ரைன் அரசின் DIYA ஆப்பில் பதிவேற்றம் செய்துகொள்ளுமாறும், தனியாக முன்பின் தெரியாத யாருடனும் செல்லவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளதுடன், தங்கள் பயணத்திட்டங்கள் குறித்து தங்களுடன் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்துமாறும், அதிகாரப்பூர்வ உதவிகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளுமாறும், ஆபத்துக்காலங்களில் தங்கள் உறவினர்களுக்கு இரகசிய குறியீடு மூலம் தகவல் தெரிவிக்க ஆவன செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.