ஸ்டாலின் ஸ்மார்ட் பாலிட்டிக்ஸ்… குடியரசு தின விழாவில் ஆளுநர் ரவிக்கு காத்திருக்கும் அவமானம்!

நிகழாண்டின் முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் வழக்கம்போல் துவங்கியது. ஆனால் அன்றைய தினம் வழக்கம்போல் முடியவில்லை. ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு, தமிழகம் அமைதி பூங்கா, மதநல்லிணக்கம், பெண்ணுரிமை, சமூக நீதி போன்ற ஆளும் திமுகவின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வார்த்தைகளை கவனமாக தவிர்த்து உரையாற்றினார் ஆளுநர்.

அத்துடன் அவர் நின்றிருந்தால் கட பரவாயில்லை. ஆனால் அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் பெயரைகூட உச்சரிக்காமல் தவிர்த்ததை கண்டு கொதித்தெழுந்த முதல்வர் ஸ்டாலின், சபை மரபை மீறி உரையாற்றிய ஆளுநருக்கு எதிராக சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதனை அவர் வாசித்ததை கண்டு பொறுக்க முடியாமல், சபையில் இருந்து பாதியிலேயே கோபாமாக வெளியேறினார் தமிழ்நாட்டின் கவர்னர் ரவி.

தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே, அவை மரபை மீறி ஆளுநரே இப்படியே சபையை விட்டு வெளிநடப்பு செய்யலாமா என்ற வாதமும், ஆளுநருக்கு எதிராகவே முதல்வர் சபையில் தீர்மானம் கொண்டு வரலாமா என்ற எதிர்வாதமும் அரசியல் அரங்கில் இன்னமும் ஓய்ந்த பாடில்லை.

இந்த வாதம், எதிர்வாதம் ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக என்று சொல்லும் அளவுக்கு சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்டதற்கு, வரும் குடியரசு தின விழாவில் தக்க பதிலடி கொடுக்கவும், கவர்னருக்கு பாடம் புகட்டவும ஸ்மார்ட்டாக தயாராகி வருகிறதாம் திமுக அரசு.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறுவதுதான் வழக்கம். ஆனால் அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த முறை விவேகானந்தர் மண்டபத்துக்கு எதிரே விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் ஆளுநர் தேசிய கொடியை ஏற்றியவுடன் மத்திய பாதுகாப்புப் படையின் பல்வேறு பிரிவு அணிவகுப்பு மரியாதை நடைபெறும். அதனை தொடர்ந்து தமிழ்நாடு காவல் துறையின் அணி வகுப்பு நடைபெறும். இதில் அணிவகுக்கும் காவல் துறை வாகனங்களில் ‘தமிழ்நாடு அமைதி பூங்கா’ என்று கொட்டெழுத்துகளில் எழுதி, அதனை ஆளுநர் கண்களில் பளிச்சென படும்படி செய்ய உள்ள திமுக அரசு ஸ்மார்ட்டாக திட்டமிட்டுள்ளதாம்.

இதேபோன்று சமூக நலத்துறை, சட்டத் துறை, அறநிலைய துறை என துறைவாரியான வாகன அணிவகுப்பில் சமூக நீதி, பெண்ணுரிமை, மதநல்லிணக்கம் போன்ற, சட்டசபையி்ல் ஆளுநர் தவிர்த்த வார்த்தைகளும் இடம்பெற உள்ளனவாம்.

இவை எல்லாவற்றையும்விட ஹைலைட்டாக அன்றைய தினம் நடைபெறவுள்ள கலை நிிகழ்ச்சிகளில் அம்பேத்கர், பெரியார், அண்ணா என ஆளுநர் சபையில் உச்சரிக்க மறுத்த தலைவர்களின் தோற்றத்தில் பள்ளி மாணவர்கள் தோன்றி, ஆளுநர் ரவிக்கு முன்பே தங்களின் தனித்திறமை வெளிப்படுத்த உள்ளார்களாம்.

ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் யாரும் பேச வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக கூறியதால், ஆளுநரை பார்த்து அவர் பயந்துவிடடார் என்று பாஜக அபிமானிகள் பராக்கிரமாக உணர்ந்திருந்தார்கள். ஆனால் எம்எ்ல்ஏக்கள் உத்தரவிட்டதுக்கு நேர்மாறாக குடியரசு தின விழாவின் நாயகனான ஆளுநரை அந்த விழாவில் வைத்தே சப்தமில்லாமல் சம்பவம் செய்ய திட்டமிட்டிருக்கும் ஸ்டாலினின் மாஸ்டர் பிளானை அறிந்து தாமரை கட்சிக்காரர்களே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

திமுக அரசின் இந்த ஸ்மார்ட் திட்டத்தை அறிந்த ஆளுநர் ரவி, மரபுப்படி குடியரசு தினத்தன்று தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் விழாவில் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைக்கலாமா அல்லது மரபை மீறி அன்றைய தினமும் உரையாற்றலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறாம். இல்லை எதுக்கு வம்பு… பேசாமல் கவர்னர் மாளிகையிலேயே கொடியேற்றி இனிப்பு வழங்கிவிடலாமா எனவும் ஆலோசித்து வருகிறாராம்.

அவர் என்னதான் ஆலோசித்தாலும் மாநிலத்தின் ஆளுநர் என்ற முறையில் குடியரசு தின விழாவில் அவர் கலந்து கொண்டுதான் ஆக வேண்டும். அன்றைக்கு இருக்கு சம்பவம் என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.