திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு: மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: திரிபுரா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 16ம் தேதியும்,   மேகாலயா,நாகாலாந்தில் பிப்.27ம்  தேதியும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்களான திரிபுரா,மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவி காலம் வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது.  3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இது பற்றி தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 16ம் தேதி நடைபெறுகிறது.

பிப்ரவரி 27ம் தேதி நாகாலாந்து, மேகாலயா சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடைபெறும். திரிபுரா மாநில  தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 21ம் தேதி தொடங்கும். மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு வரும் 31ம் தேதி வேட்பும னுதாக்கல் தொடங்கும்.  வேட்புமனு திரும்ப பெற திரிபுராவுக்கு பிப்.2ம் தேதியும், பிற மாநிலங்களுக்கு பிப்.10ம் தேதி கடைசி நாளாகும். மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படும்’’ என்றனர். திரிபுராவில் பாஜ ஆட்சியும், மேகாலயா,நாகலாந்தில் பாஜ கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் தலா 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.