விவசாயி சுட்டுக் கொலை| Farmer shot dead

பைரேலி, உத்தர பிரதேசத்தில் சாலையில் ஏற்பட்ட தகராறில், விவசாயி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, ஹபீஸ்கஞ்ச் அருகே உள்ள நவுநாகலா கிராமத்தைச் சேர்ந்தவர் பரமானந்த், 40.

விவசாயியான இவர், கரும்பை அறுவடை செய்து மாட்டு வண்டியில் ஏற்றி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நபர், வழி விடுமாறு கூறி பரமானந்திடம் தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்தோர் சமரசம் செய்தனர். இருந்தும், பைக்கில் வந்த நபர், திடீரென துப்பாக்கியை எடுத்து பரமானந்தை சுட்டுவிட்டு தப்பினார்.

தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.