பெய்ஜிங்: கடந்த 2020-ம் ஆண்டுக்கு பிறகு கரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இதன் காரணமாக கரோனா பரவல் அங்கு மீண்டும் தீவிரமடையத் தொடங்கியது. தினசரி உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சீனப் புத்தாண்டு ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு சீனாவில் 7 நாட்களுக்கு பொதுவிடுமுறை வழங்கப்பட உள்ளது. தற்போது சீனாவில் கரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் புத்தாண்டு விடுமுறை நாட்களில் அங்கு நாளொன்றுக்கு 36,000 பேர் கரோனா தொற்றால் உயிரிழக்கக் கூடும் என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஆய்வு நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.