மஹராஜ்கஞ்ச், உத்தர பிரதேசத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பள்ளி மாணவனும், மாணவியும் தற்கொலைக்கு முயன்றனர். இதில் மாணவன் உயிரிழந்தான்.
உத்தர பிரதேசத்தின் மஹராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், பிளஸ் 2 படித்த மாணவனும், 16 வயது மாணவியும் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தபோது, இரு தரப்பு பெற்றோரும் கடுமையாக எதிர்த்தனர். மாணவியின் மைனர் வயதை காரணம் காட்டி, அவர்களின் காதலையும் ஏற்க மறுத்தனர்.
இதில் இருவரும் மனமுடைந்து, பள்ளி வளாகத்திலேயே நேற்று முன்தினம் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், மாணவி உடல்நலம் தேறி வரும் நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement