தாய் குரங்கிடம் இருந்து குட்டியைப் பிடுங்கி கொஞ்சும் சிறுமியிடம் தாய் குரங்கு செல்லமாகச் சண்டையிடம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு சிறுமியைச் சுற்றி சில குரங்குகள் இருக்கின்றன. அதில் ஒரு தாய் குரங்கு தனது குட்டியை மடியில் வைத்துள்ளது. அந்த தாய் குரங்கிடமிருந்து குட்டியை சிறுமி வாங்கி குழந்தை போல் தோள் மேல் வைத்து கொஞ்சுகிறாள்.
மீண்டும் தாய் குரங்கு சிறுமியிடமிருந்து குட்டியை வாங்கிக்கொண்டு செல்லும் போது, சிறுமி விடாப்பிடியாகக் குட்டியை வாங்க முயற்சி செய்யும் காட்சி பார்ப்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
சிறுமி குட்டியை விடாப்பிடியாக பிடுங்கினாலும், தாய் குரங்கு கோபப்படாமல் குட்டியை நெருக்கமாக பிடித்துக்கொள்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஒருவர், இந்தியாவை தவிர உலகில் வேறு எங்கும் விலங்குகளுடன் இதுபோன்ற நட்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in