‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’- பிபிசியின் ஆவணப்படத்தால் சர்ச்சை.!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளது. பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசின் ரகசிய விசாரணையில் கலவரத்துக்கு மோடியே காரணம் என தெரியவந்ததாக ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான இந்த ஆவணப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணவில்லை என்றும் 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், இங்கிலாந்தில் 2001 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்த வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா, பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள ஒருவர், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என சுட்டிக்காட்டுகிறார்.

இதையடுத்து, இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ”இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் மனநிலையை இது பிரதிபலிக்கிறது.

நான்கு ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி நிதி பெற்ற பாஜக; தேர்தல் ஆணையம் தகவல்.!

ஒரு சார்பான ஆவணப்படம் இது. காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை இது காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல” என விமர்சித்துள்ளார். ஆனாலும் ஆவணப்படம் பல உண்மைகளை கேள்விக்கு உட்படுத்தியாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.